கொரோனா தொற்றிய முதியவர்களைக் கருணைக் கொலை செய்யப் போகிறதா பிரான்ஸ்?

உலகளாவிய ரீதியில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கட்டுக்கடங்காமல் தொற்றி வருகின்றது கொரோனா வைரஸ்.

அத்துடன் குறித்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த வல்லரசாலும் முடியாமல் போனதுதான் இயற்கை எமக்களித்த பாடமாகின்றது.

இந் நிலையில், கொரோனா தாக்கிய முதியவர்களை கருணைக்கொலை செய்ய அரசு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளதாக பிரான்சில் ஒரு செய்தி பரவியது.

வலிமையான மயக்க மருந்துகளை கொடுத்து முதியவர்களைக் கருணைக்கொலை செய்யுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த செய்திகள் கூறின.

Rivotril என்னும் மயக்க மருந்தின் பயன்பாடு குறித்த விதிகள் மற்றப்பட்டுள்ளது தொடர்பாக ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்லைனில் செய்திகள் பரவின.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான Gilbert Collard என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த செய்தி 2 ஆயிரத்து 300 முறை பகிரப்பட்டது.

அந்த செய்தியில், Covid-19: 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை ஒன்று, மருத்துவமனைகளை நிரப்பும் முதியவர்களை சமுதாயத்திலிருந்து அகற்ற கருணைக்கொலையை பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கிறது.

நம் நாட்டைப்போய் மனித உரிமைகள் உள்ள நாடு என்று அழைகிறோம், என்ற வண்ணம் அந்த செய்தி அமைந்திருந்தது. ஆனால், அந்த செய்தி உண்மையில்லை, அது ஒரு வதந்தி என்பதை பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

Previous Post Next Post