
அந்தவகையில் வேலணை பிரதேச சபையினால் அதன் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள வேலணை மத்திய கல்லூரி, சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம், மேற்கு நடராஜா வித்தியாலயம், துறையூர் ஐயனார் வித்தியாலயம், வே.கிழக்கு மகா வித்தியாலயங்களுக்கு இன்றைய தினம் தொற்று நீக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை முதல்கட்டமாக கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆசிரியர்களின் வருகையுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக எதிர்வரும் 06 ஆம் திகதி 13, 11 மற்றும் 05 ஆம் தர மாணவர்களுக்குப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.