தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் சடலத்தினை இன்று பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த மாணவியை காணவில்லை என உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் வீட்டின் அறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டவாலிகா பிரபாகர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post