முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் குடும்பத் தகராற்றில் தந்தையால் வெட்டப்பட்ட சிறுமியொருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் (8) இந்த சம்பவம் நடந்தது.குடும்ப தகராறை தொடர்ந்து, தனது 5 வயதான மகள் மீது சரமாரியாக கத்தியால் வெட்டிள்ளார்.
சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதேவேளை லண்டனில் ஈழத்தைச் சேர்ந்த பெற்றோர்களினால் அவர்களின் பிள்ளைகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.