லண்டனில் பெற்ற மகளைக் குத்திக் கொலை செய்த தாய்! நடந்தது என்ன? (முழு விபரம்)

நேற்றைய தினம் பிரித்தானியா மிட்சம் பகுதியில் தனது மகளை கத்தியால் குத்தி தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த பெண் முல்லைத்தீவு நெடுங்கேணியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலும் அந்தத் தாய் தொடர்பிலும் உறவினர்கள் தெரிவித்த தகவலின்படி,

சுதா என எல்லோராலும் அழைக்க்ப்படும் நெடுங்கேணியைச் சேர்ந்த குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு கான்சர் என்னும் மாறாநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி உறவினர்களிடம் தெரிவித்திருந்தார் .

தன் உயிருக்கு ஏதும் நடப்பின் என் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவேளை நான் இறந்தாலும் என் மகளையும் என்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் சொல்லுவாராம்.


முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த கருணாநிதி சிவானந்தம் (சுகந்தன்) நெடுங்கேணியைச் சேர்ந்த சுதா தம்பதியினருக்கு சுடர்ணனன்(10), சயனிகா(4) என்னும் இரு பிள்ளைகள்.

சம்பவத்தன்று தினமும் 4 மணிக்கு குளிக்கப் போகும் மகனை 3 மணிக்கு குளிக்கப்போகும்படி தாயார் வற்புறுத்தியதை அடுத்து குளிக்கச்சென்ற மகன் முடித்துவந்து பார்க்கையில் தாயார் இரத்தம் சொட்டச் சொட்ட படுத்திருந்ததைக் கண்டு அயலவர்களின் உதவியை நாடியதாகவும், பின்னர் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தகவலை தெரிவித்துள்ளான்.


உடன் அங்கு வந்த அயலவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் கத்தியால் குத்தப்பட்ட 4 வயது சிறுமி சயனிகாவையும், 35 வயது நிரம்பிய சுதாவையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கையில் சிறுமி சயனிகா உயிரிழந்துள்ளார்.  தாயார் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அயலவர் தெரிவிக்கையில்,

பதற்றத்தோடு உதவி கேட்ட சிறுவனுடன் நான் பிளாட்டுக்குள் சென்றேன். படுக்கையறையில் எல்லா இடங்களிலும் ரத்தம் இருந்தது. தாயின் உடலில் ஒரு காயம் இருந்தது. அவள் இன்னும் பதிலளித்தாள். ஏதோ முணுமுணுத்தாள். பின்னர் நான் படுக்கையைப் பார்த்தேன். அவளுடைய மகள் அவள் பக்கத்தில் இருந்தாள்.


நான் மருத்துவ பயிற்சி பெற்றவள். அவள் போய்விட்டாள் என்று எனக்குத் தெரியும்.. உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன் என்றார்.

மேலும் அவர்கள் மிகவும் அருமையான குடும்பத்தினர். ஆனாலும் தாய் ஏதோ மனவருத்தத்தில் இருந்தாள் எனவும் அயலவர் தெரிவித்திருந்தார். நாங்கள் மிகவும் சோகமாக இருக்கின்றோம். இவ்வாறு நடந்திருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. சுதா மன வருத்தத்தில் இருந்தார்.

தற்போது இத் துயரச் சம்பவம் தொடர்பாக கருணாநிதி சிவானந்தம் மிகவும் குழப்பத்திலேயே இருக்கின்றார் என உறவினரான தினேஷ் சிவானந்தம் தெரிவித்திருந்தார்.

அப் பகுதியில் உள்ள தமிழ்க் கடை ஒன்றின் உரிமையாளர் பத்மநாதன் அரியரட்னம் தெரிவிக்கையில்,


மிகவும் அற்புதமான குடும்பம். அடிக்கடி கடைக்கு வருவார்கள். ஆனால் அந்த குறித்த தாய் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகவும் அவர் ஆயுர்வேத வைத்தியத்தை (மூலிகை சிகிச்சை) நாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

அயலவரான தபேகா துரைரட்ணேஸ்வரன் தெரிவிக்கையில்,

சிறுமி சயனிகா மிகவும் அழகானவள். அடிக்கடி இங்கு விளையாட வருவாள். அவளுக்கு இப்படி நடந்தது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. மிகவும் கவலையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் கருணாநிதி சிவானந்தம் சூப்பர்மார்க்கெட் செயின்ஸ்பெரியில் பணிபுரிபவர்.

இதுதொடர்பில் மேலும் சில உறவினர்கள் தெரிவிக்கையில்,


என்ன நடந்திருக்கும் என்பதனை சித்தரித்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் திட்டமிட்டு செயற்படிருக்கின்றாள் சுதா என தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில் செயின்ஸ்பெரியில் வேலைமுடித்து கணவன் 5 மணிக்கு வருவார் என தெரிந்தும் வழமையாக 4 மணிக்கு குளிக்க போகும் மகனை 3 மணிக்கு குளிக்க அனுப்பிவிட்டு தனது மகளையும் மாய்த்து, தன்னையும் மாய்க்க நினைத்துள்ளார்.

ஏனோ பாவம் குழந்தை உடனேயே உயிரைவிட சுதாவோ உயிர்தப்பியுள்ளார். மகன் சுடர்ணனனனோடு ஏதுமறியாத கருணாநிதி சிவானந்தம் என்ன நடந்தது? எவ்வாறு இது நடந்தது? எப்படி இது சாத்தியமாகும்? என்ற மனக்குழப்பத்தில் செய்வதறியாது நிலைதடுமாறியுள்ளார்.


இந்நிலையில் இன்றைய தினமும் சுதா மருத்துவ அப்பொயிண்ட்மெண்ட் வைத்திருந்ததாகவும் தெரிவித்த உறவினர்கள் இப்படி செய்துவிட்டாளே என கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில்,

இக் கொலை தொடர்பில் வேறு யாரும் தொடர்புபடவில்லை என தெரித்துள்ளனர். குழந்தையின் இளஞ் சிவப்பு சைக்கிள் மலர் அஞ்சலிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தையான கருணாநிதி சிவானந்தம் என்பவர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான சுடர்ணனன் அவர்களின் சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post