பிரான்ஸில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பம்? ஒரே நாளில் ஆயிரத்தைக் கடந்த தொற்று!!

பிரான்சில் COVID 19 வைரஸ் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்துள்ளனர். (24/07/2020) வெள்ளிக்கிழமை மாலை பொது சுகாதார நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளதோடு, இந்த திடீர் அதிகரிப்பு கவலையளிப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் 1,130 பேருக்கு COVID 19 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளிருப்பு தளர்த்தப்பட்டபோது இறுதியாக நாள் ஒன்றில் 1000 வரையானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில் கிட்டத்தட்ட இரு மாதங்களின் பின்னர் மீண்டும் அதே அளவு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளிருப்பு வெளியேற்றத்தின் போது, நாம் முதல் வாரத்தில் கடைப்பிடித்த நல்ல விஷயங்களை கைவிட்டுள்ளோம்.

அதுவே இந்த புதிய எண்ணிக்கையான தொற்றுக்கு காரணமாக உள்ளது என பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 5,720 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 410 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

Previous Post Next Post