கனடா தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி தொடர்பில் வெளியான தகவல்கள்! (படங்கள்)

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 12 வயதான இலங்கைத் தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா - மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முந்தினம் காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் கனடிய செய்திகள் தெரிவிக்கையில்,

தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உயிரிழந்த சிறுமியின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Previous Post Next Post