யாழ்ப்பாண ரௌடிகளிற்கு பகிரங்க எச்சரிக்கை: பரவலாக துண்டுப்பிரசுரம்!

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் ஆவா குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பரவலாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வாள்வட்டு, அடாவடி, பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடுபவர்களிற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

N.G.K. என்று உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றினாலேயே மேற்படி எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Previous Post Next Post