வாக்குப் போட்ட சீட்டைப் படம் எடுத்துப் பதிவேற்றிய அரச ஊழியர் உட்பட இருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அரச ஊழியர் ஒருவரும் அவருடைய நண்பர் ஒருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடிவேலு படம் ஒன்றில் வாக்காளர் ஒருவர் தான் அளித்த வாக்குத் தொடர்பில் வாக்களித்த பின்னர் வடிவேலுவிற்கு வாக்குச் சீட்டை காட்டி விளக்கமளிப்பார்.

ஆனால் அதற்கு சற்று மாறுதலாக புதுக்குடியிருப்பில் ஊழியர் ஒருவர் தான் அளித்த தபால் மூல வாக்குச் சீட்டின் ஒளிப்படத்தினை தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பியதன் பலனாகவே அவரும் நண்பரும் கைதாகியிருக்கின்றனர்.

வாக்களித்த ஊழியரிடம் வாக்குச்சீட்டின் படத்தினைப் பெற்றுக்கொண்ட அவருடை நண்பர், “என்னுடைய நண்பன் ஒருவன் தன்னுடைய வாக்கினைச் செலுத்திவிட்டு புகைப்படம் மூலம் தன்னுடைய நாணயத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டு வாக்குச்சீட்டில் புள்ளடியிடப்பட்ட படத்தினையும் இணைத்து பதிவேற்றியிருக்கின்றார்.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் பதிவேற்றியவரையும் அரச ஊழியரையும் கைது செய்துகின்றனர்.
Previous Post Next Post