பிரான்ஸில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா! ஒரே நாளில் 40 புதிய தொற்று வலயங்கள்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் 40 புதிய தொற்று வலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை 7,379 பேருக்கும், நேற்று முன்தினம் சனிக்கிழமை 5,453 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாத நடுப்பகுதியில் 3.7% வீதத்தில் இருந்த தொற்று வீதம், தற்போது 4.1% வீதமாக அதிகரித்துள்ளது.

****

தற்போது மருத்துவனனையில் 4,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 402 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

***

கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் மொத்த சாவு எண்ணிக்கை 30,606 ஆக அதிகரித்துள்ளது.

****

346 தொற்று தொகுதிகள் தற்போது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் புதிதாக 40 தொற்று வலையங்கள் கடந்த 24 மணிநேரத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
Previous Post Next Post