“வசந்த் அன் கோ” உரிமையாளர் உயிரிழந்தார்…!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழகத்தில்,கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரலில் தொற்று அதிகரித்து சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்து விட்டதாக மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்த முதல் எம்பி வசந்தகுமார் ஆவார்.

வசந்தகுமார் “வசந்த் அன் கோ” நிறுவனத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post