கொலைக் களமாகும் யாழ்.- தீவகப் பேருந்துப் பயணங்கள்! அச்சத்தில் உறையும் மக்கள்!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளுக்கும், தீவகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தமது உயிர்களைக் கையில் பிடித்தவாறு பயணம் செய்வதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.,தீவகத்துக்கான 776 மற்றும் 780 இலக்க தனியார் பேருந்துகள் ஒருவரையொருவர் முந்திச் செல்லும் போட்டிகளில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள், வீதிகளில் செல்லும் மக்கள் என அனைவரும் உயிர்ப் பயத்துடன் பயணிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து குறிகாட்டுவானுக்குச் சேவையில் ஈடுபடும் 776 இலக்க பேருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறைக்குச் சேவையில் ஈடுபடும் 780 இலக்கத் தனியார் பேருந்துகளுமே இவ்வாறு பயணிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


தீவகத்தின் இடைப்பட்ட பகுதிகளில் நேரக் கண்காணிப்பாளர் இல்லாததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மிகவும் மோசமாக நடந்து கொள்ளும் சாரதிகள், துறையூர்ப் பகுதியில் தரித்து நின்று மற்றைய பேருந்து வருவதைக் கண்டவுடன் தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர்.

இதனால் வேலணை, வங்களாவடிச் சந்திப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதுடன், அப் பகுதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்களும் மக்களும் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்து ஏற்படவிருக்கும் உயிர்ச் சேதங்களைத் தடுப்பதுடன், அச்சமில்லாத பயணத்தைப் பயணிகள் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post