மாவையை அகற்ற இரகசிய சதி! தேசியப் பட்டியல் எம்.பியானார் கலையரசன்!!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை அரங்கை விட்டு அகற்றும் இரகசிய முயற்சி நேற்று இரவோடிவாக நடந்து முடிந்தது.

யாழிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சிறிதரன் ஆகியோர் இரா.சம்பந்தனுடன் இணைந்து, தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறையின் கலையரசனிற்கு வழங்கினர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கருத்து பெறாமல், தமிழ் அரசு கட்சியின் ஏகோபித்த விருப்பத்தை புறம்தள்ளி, வழக்கம் போல- இரா.சம்பந்தன், சுமந்திரன் கூட்டு, இம்முறை சிறிதரனையும் இணைத்து இந்த இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

யாழிலிருந்து நேற்று திருகோணமலைக்கு சென்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர், செயலாளர் துரைராசிங்கத்தையும் மட்டக்களப்பிலிருந்து அழைத்து, இந்த இரகசிய நகர்வை மேற்கொண்டனர்.

ஏற்கனவே இரா.சம்பந்தன்-சுமந்திரன் அணியின் தன்னிச்சையான நடடிக்கைகளால் தமிழ் தேசிய அரசியல் பெருவீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், புதிதாக சிறிதரனையும் இணைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சதி நடவடிக்கையால் இலங்கை தமிழ் அரசு கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
Previous Post Next Post