பிரான்ஸை மீண்டும் வாட்டியெடுக்கும் கொரோனா! நாளாந்தம் 5 ஆயிரம் பேருக்குத் தொற்று!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உலக நாடுகளை சின்னாபின்னமாக்கிக் கொண்ட கொரோனா கடந்த நாட்களில் கொஞ்சம் தணிந்திருந்தாலும், தற்போது சில நாடுகளில் இரண்டாம் கட்டப் பரவலை ஆரம்பித்துள்ளது. 

அந்தவகையில் பிரான்ஸில் கொரோனா ஏற்கனவே பல உயிர்களைப் பலியெடுத்த நிலையில் சற்று தணிந்திருந்தது. ஆனால் தற்போது மிக வேகமாகப் பரவி நாளாந்தம் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் வரை தொற்றுக்குள்ளாக்கி வருவதுடன், கடந்த சில நாட்களை விட உயிரிழப்புக்களும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. 

இந் நிலை எதிர்காலத்தில் பெரும் ஆபத்தில் முடிவடையும் என பலதரப்பட்டவர்களாலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் இன்னுமொரு தேசிய முடக்கத்துக்கு பிரான்ஸ் அரசு செல்வதற்கு தயக்கம் காட்டி வரும் நிலையில், அது தொடர்பில் அரச, சுகாதார உயர்மட்டத்தில் கலந்தாலோசனைகளும் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில்,  பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 01, 2020 செவ்வாய்க்கிழமை

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 26பேர் மரணம்

4,982 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை....
மொத்த இறப்புக்கள் 30,661
மொத்த தொற்றுக்கள் 286,007

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,514 (+7)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,147 (24 மணி நேரத்தில் +19) ஆகும்.

பிரான்சில் தற்போது மொத்தம் 4,604பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 424 (+15) பேர் உள்ளனர்.

இதேவேளை பிரான்ஸில் ஈழத் தமிழர்கள் பலரையும் இந்தக் கொடிய கொரோனா பலியெடுத்திருந்தது. எனவே புலம்பெயர் தேசத்தில் வாழும் எம் உறவுகள், உங்களின் பாதுகாப்பினை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்.  
Previous Post Next Post