பிரான்ஸில் கொரோனா! ஒரே நாளில் என்றுமில்லாதளவு உயர்வு!! 50 பேர் உயிரிழப்பு!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனா வைரஸ் காரணமாக இன்று பதிவான புதிய சாவுகள் மற்றும் தொற்று விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 10,593 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. உள்ளிருப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் நாள் ஒன்றில் பதிவாகும் அதிகூடிய தொற்று இதுவாகும். அதேவேளை கடந்த ஒரு வாரத்தில் பிரான்சில் 60,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 84 புதிய தொற்று வலையங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தவிர, 50 பேர் மேலதிகமாக சாவடைந்துள்ளனர். ஜூன் மாதத்தின் பின்னர் நாள் ஒன்றில் பதிவான அதிகபட்ச சாவு எண்ணிக்கை இதுவாகும்.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 17, 2020 வியாழக்கிழமை.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 50பேர் மரணம்

10,593 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை....
மொத்த இறப்புக்கள் 31,095
மொத்த தொற்றுக்கள் 415,481

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,528

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,567 (24 மணி நேரத்தில் +50) ஆகும்.

கடந்த 7 நாட்களில் பிரான்சில் தற்போது 3,223 புதிய மருத்துவமனைகள் உள்ளன, இதில் 535 தீவிர சிகிச்சை வழக்குகள் உள்ளன. சோதனை நேர்மறை விகிதம் 5.4% ஆக உள்ளது.


Previous Post Next Post