வெடித்துச் சிதறும் நிலையில் எரியும் கப்பல்! அம்பாறை மக்களுக்கு எச்சரிக்கை!! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
(இரண்டாம் இணைப்பு)
எண்ணெய் கப்பல் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது!

இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலின் தீ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படை இதனை அறிவித்துள்ளது.

மசகு எண்ணெய் ஏற்றியபடி இந்தியாவிற்கு சென்ற பனாமா நாட்டை சேர்ந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் நேற்று முன்தினம் தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. இதில் ஒரு கப்பல் பணியாளர் கொல்லப்பட்ட நிலையில், 22 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


தீயை கட்டுப்படுத்த இலங்கை, இந்திய கடற்படைகள், இலங்கை விமானப்படை மற்றும் பிற அமைப்புக்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்றிரவு பெரும் தீ கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

இந்த கப்பலில் 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
(முதலாம் இணைப்பு)

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிந்து கொண்டிருக்கும் எண்ணை கப்பல் எந்த நேரத்திலும் வெடித்து சிதறக்கூடிய அபாய நிலை காணப்படுவதால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிந்துவருகின்றது. இந் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு இன்று(4) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


திருக்கோவில், தம்பிலுவில், உமிரி, பொத்துவில், கல்முனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேச கடற்கரையோரத்தில் வாழும் மக்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் தற்போதைய சூழலில் ஆபத்து இல்லை என்றுஇலங்கை கடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் எண்ணை கப்பல் எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம். எனவே அம்பாறை மாவட்ட மக்கள் குறிப்பாக கரையோரப்பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டிருக்கின்றனர். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.


மசகு எண்ணெய் கப்பல் வெடிக்கும் பட்சத்தில் பின்வரும் அபாயங்கள் ஏற்படும்!

கடல் நீர்ப்பெருக்கு கரையை நோக்கி வரும்.

கடற்றொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மீன்பிடி வள்ளங்கள் மற்றும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையும் சூழல் ஏற்படும்.

சூழல் மற்றும் நீர் நிலை மாசடையும்.

மீனவர் தொழில் பாதிப்பு மற்றும் உணவுத் தட்டுப்பாடு.

இவ்வாறான சூழ்நிலையில் இருந்து பொதுமக்களையும் மற்றும் சூழலையும் பாதுகாப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.


கரையோர மக்களையும் மீனவர்களையும் விழிப்புணர்வூட்டுதல் மற்றும் விழிப்பாக இருக்க அறிவுறுத்தல் செய்தல்.

கடல் மற்றும் தரையில் உள்ள மீன்பிடி வள்ளங்கள் மற்றும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல்.

தொடர்ச்சியாக அரசு செய்திகளை கேட்டு செயற்படுவதற்கான அறிவுறுத்தல்களை பொது மக்களுக்கு வழங்குதல்.

தேவையில்லாமல் அனர்த்த வேளையில் கடற்கரையில் வேடிக்கை பார்க்கும் விடயங்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல்.

கரையோரப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களில் வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் விசேட தேவையுடையோர் ஆகியோரின் விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.Previous Post Next Post