யாழில் உப அதிபரின் நேர்மையான செயல்! குவியும் பாராட்டுக்கள்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சங்கானை இலங்கை வங்கிக்கு முன்பாக தவறவிடப்பட்ட ஒரு தொகைப் பணத்தை மீட்ட சங்கானைச் சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபர், அதனை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

வடக்கம்பரையைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த முதலாம் திகதி சங்கானை இலங்கை வங்கி தானியக்க பணப் பரிமாற்றல் இயந்திரத்தில் பணத்தை மீள எடுத்துவரும்போது ஒரு தொகைப் பணத்தை வங்கிக்கு முன்பாகத் தவறவிட்டுள்ளார்.


அந்தப் பணத்தை மீட்ட சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபர் சோதிலிங்கம் ஜனா, அது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபரின் இந்தச் செயற்பாட்டைப் பலரும் பாராட்டுகின்றனர். அத்துடன் இலங்கை வங்கியின் சிசிரிவி பதிவைப் பெற்று உரியவரை அடையாளம் கண்ட அவர், அந்தப் பணத் தொகையை ஒப்படைத்தார்.

Previous Post Next Post