பிரான்ஸில் எல்லை தாண்டியது கொரோனா! ஒரே நாளில் உச்சக்கட்டத் தொற்று!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டுள்ளது.

பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 7,017 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 3,000 பேருக்கும், நேற்று செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 5,000 பேருக்கும் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் ஒரே நாளில் அதிகபட்சமாக 7,017 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

4,632 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 446 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் 57 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பிரான்சில் 30,686 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர். அவர்களில் 25 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர்.
Previous Post Next Post