புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி! மாகாணப் பணிப்பாளர் தகவல்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்களில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றைய பெண்ணுக்கு கொரோனா இல்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கம்பஹா ஆடைத்தொழிற்சாலையிலிருந்து ஊர் திரும்பியிருந்த நிலையில் இரண்டு பெண்களும் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் மூன்று பேருடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் எவருக்கும் தொற்றில்லை என்று வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post