இலங்கையில் மற்றும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்! பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீண்ட கால நோயால் பீடிக்கப்பட்ட இவருக்கு கொவிட் 19 தொற்றுடன் நியுமோனியா நிலைமை ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post