கொரோனாத் தொற்று! 22, 23 ஆம் திகதிகளில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்!!-இராணுவத் தளபதி


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டின் தற்போதைய நிலமைக்கு ஏற்ப மேலும் எடுக்க வேண்டிய முடிவுகள் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தவோ அல்லது தனிமைப்படுத்தவோ எந்த காரணமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், 22 அல்லது 23ஆம் திகதிக்குள் நாட்டின் நிலமையைப் பொறுத்து ஜனாதிபதியும் அரசும் தேவையான முடிவுகளை எடுப்பார்கள் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
Previous Post Next Post