மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம்! லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென்-கிழக்குப் பகுதிகளை உடனடியாக மூடி முடக்குகின்ற உத்தரவை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) விடுத்திருக்கிறார்.

நத்தாருக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கொண்டாட்டங்களைத் தவிர்த்து மக்களை வீடுகளுக்குள் முடக்கும் விதமான நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் (Tier 4 lock down) அங்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

நாட்டின் சனத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினரை உள்ளடக்கிய பின்வரும் பிரதேசங்கள் நான்கு அடுக்கு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

London, Kent, Buckinghamshire, Berkshire, Surrey excluding Waverley, Gosport, Havant, Portsmouth, Rother and Hastings, and East of England areas including Bedford, central Bedford, Milton Keynes, Luton, Peterborough, Hertfordshire, Essex excluding Colchester, Uttlesford and Tendring.

ஏற்கனவே மூன்று அடுக்குக் கட்டுப்பாடுகளில் இருந்த பிரதேசங்கள் நான்காவது நிலைக்கு மாற்றப்படுவதால் ஒருவீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டுக்கு சென்று நத்தார் ஒன்று கூடல்களில் பங்கு கொள்வது முற்றாகத் தடுக்கப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இந்த இறுக்கமான நான்கு அடுக்குக் கட்டுப்பாடுகளை அவசரமாக அமுல்ப்படுத்தவேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்பதாக பிரதமர் இன்று நாட்டுக்குத் தெரிவித்திருக்கிறார்.

புதிய மரபு மாற்றம் பெற்ற வைரஸ்(new coronavirus variant) மீள் எழுச்சி கொண்டு வேகமாகப் பரவி வருவதால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமுலுக்கு கொண்டுவரத் தீட்டி இருந்த தளர்வுத் திட்டங்களை மாற்றி மேலும் இறுக்கமான பல புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக அமுல்ப்படுத்தவேண்டிய அவசரம் அங்கு உருவாகி இருக்கிறது.

ஆபத்தானதா, தடுப்பூசிக்கு கட்டுப்படாத வீரியம் கொண்டதா என்பதை தெளிவாக இப்போதைக்கு கூறமுடியாது விட்டாலும் புதிய மரபு மாறிய வைரஸ் வேகமாகப் பரவுகின்றது என்பதை பிரதமர் நாட்டுக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.

வைரஸின் இந்தப் புதிய திரிபு இலகுவாகவும் மிக வேகமாகவும் பரவிவருகின்றது என்பதை புதிய, சுவாச வைரஸுகளது அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கும் அறிவியலாளர் குழுவும் (The Advisory Group on New and Emerging Respiratory Virus Threats) உறுதிப்படுத்தி உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

வைரஸின் இந்த திரிபு குறித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு அரசு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளது.
Previous Post Next Post