காதல் விவகாரம் வாள்வெட்டில் முடிந்தது! ஒருவர் உயிரிழப்பு!! –கிளிநொச்சியில் சம்பவம் (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜெயபுரம் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும். கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முழங்காவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous Post Next Post