நல்லூர் பிரதேச சபையின் பட்ஜெட்டை ஏன் தோற்கடித்தோம்? உறுப்பினர்கள் விளக்கம்! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் கடந்த 15 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது. 

இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழந்தார். 

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதேவேளை குறித்த வரவு-செலவுத் திட்டத்தினை எதிர்த்து வாக்களித்து ஏன் தோற்கடித்தோம் என்பது தொடர்பில் உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளனர்.

உறுப்பினர்களின் குற்றச்சாட்டை தவிசாளர் மறுத்துள்ளார். இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post