பிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு! தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்!!


பிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (15) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

தனது தாயின் இறுதிக் கிரியைகள் நடைபெறவிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆனந்தா வீதி, மானிப்பாயைச் சேர்ந்த, பிரான்ஸ் ஸ்தான் நகரில் வசித்து வந்த அருந்தவம் தயாகரன் (பாபு-வயது-50) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
 
அவரது தாயாரான அருந்தவம் கருணாதேவி (வயது-79) உடல் நலக்குறைவால் கடந்த 06 ஆம் திகதி பிரான்ஸில் உயிரிழந்தார். அவரின் இறுதிக் கிரியைகள் நடைபெறவிருந்த நிலையில் இவரும் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post