இலங்கைக்குள் ஊடுருவியது சீன இராணுவம்? வெளியானது காணொளி! (வீடியோ இணைப்பு)

திஸ்ஸமகாராமய வாவி புனரமைப்பு பணிகள் சீன - இலங்கை கூட்டு நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த சீருடையுடன் சிலர் நின்றதாக முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, 

அமெரிக்க இராணுவம் இலங்கையில் கால்தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய மிலேனியம் சலஞ்ச் உடன்படிக்கை கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டது.

எனினும், தென்பகுதியில் இத்தகைய சீருடையினை அணிந்த வெளிநாட்டவர்களை வேலைத் தளங்களில் காண முடிகிறது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கை மன்னரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் திஸ்ஸமகாராமய வாவி சுத்தம் செய்யப்படுகிறது. 

இந்த புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் அணிந்திருப்பதைப் போன்ற சீருடைகளை அணிந்த பங்கேற்றவர்கள் யார்? என அந்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Previous Post Next Post