இன்று நள்ளிரவுடன் எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு!


இன்று (11.06.2021) நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன சந்தைப்படுத்தல் தலைமைக் காரியாலயத்தினால் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
  • பெற்றோல் 92 ஒக்ரைன் – 157 ரூபாய்
  • பெற்றோல் 95 ஒக்ரைன் – 184 ரூபாய்
  • டீசல் – 111 ரூபாய்
  • சுப்பர் டீசல் – 144 ரூபாய்
  • மண்ணெண்ணெய் – 77 ரூபாய்
ஆகவே, மேற்கூறப்பட்ட விலை மீள்திருத்தத்திற்கு அமைவாக தங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த எரிபொருள் விலை ஏற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊடக அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
Previous Post Next Post