பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா! 24 மணி நேரத்தில் 48,553 பேருக்குத் தொற்று!!


உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட் தொற்று கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 48,553 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கோவிட் வழக்குகள் கடந்த வாரத்தை விட 32.6 வீதம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் திகதிக்குள் நாளாந்த கோவிட் வழக்குகள் 50,000 ஆக இருக்கக்கூடும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்னர் எச்சரித்திருந்தார்.

பிரித்தானியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு கவலைகளுக்கு வழிவகுக்கிறது.

பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 5,281,098 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 128,593 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 772,475 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 545 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,380,030 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
Previous Post Next Post