காலத்தின் தேவை கருதி இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட அவசர வேண்டுகோள்!தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் காலத்தின் தேவை கருதி அவரச வேண்டுகோளை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில் குறித்த பேரவை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நமது நேசத்துக்குரிய தாய் நாடாகிய இலங்கையில் இன்று கொவிட் - 19 பெருந்தொற்று, நாடு முழுவதும் பரவி பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டும், மனித வாழ்வில் பல நிலைகளில் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி நாட்டையே வெகுவாகப் பாதித்துள்ளது. சமூக, அரசியல், மத மற்றும் இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அரசாங்கமும் பொதுமக்களும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து மக்களின் நலனுக்காக ஒத்துழைப்புடன் செயற்படாவிட்டால் சில நிடித்த தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படலாம். அரசாங்கம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளும் தடுப்பூசித் திட்டத்திற்காக பாராட்டும் வேளையில், சமூகத்தின் ஏழ்மைச் சூழலில் தொற்று நோயால் ஏற்படும் மோசமான வினைவுகளைத் தடுக்க இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.

பிள்ளைகள் மற்றும் இளையவர்களைப் பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்குடனேயே பாடசாலைகளும் பிற கற்றல் நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நேரத்தில் கல்வி சுற்கும் மாணவர்களின் நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். பாடசாலைகளை கூடிய விரைவில் திறக்குமாறு அரசாங்கத்தை அழைக்கின்றோம். மாணவர்கள் அறிவில் மட்டும் வளர்ந்தால் போதாது அவர்கள் உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், ஆன்மீக, ஆரோக்கிய நிலைகளிலும் முன்னேறுவதற்கு அவர்களின் ஆசிரியர்கள், சகமாணவர்கள் மற்றும் நண்பர்களுடணன தொடர்புகள் ஊடாகவும் கல்வி பாடவிதானங்கள், விளையாட்டுக்கள் மூலமாகவும் அவர்கள் தமது உணர்வுச் சமநிலையினை அடைவார்கள்,

எதிர்கால குடிமக்களை உருவாக்குவதும் வடிவமைப்பதும் ஆசிரியர்களின் புனித பணியாகும். ஆசிரியர்கள் தம் பொறுப்பிலுள்ள மாணவர்களைக் கருத்திற்கொண்டு தற்போது அனுஷ்டிக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம். அதேவேளை, எமது எதிர்கால குடிமக்களையும், தலைவர்களையும் உருவாக்கும் ஆசிரியர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பதால், அவர்களின் நீளடகால சம்பள முரண்பாடுகளைச் சீர்செய்யுமாறு மாணவர்களின் நலனுக்காக அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோளையும் விடுக்கின்றோம்.

வீட்டு வன்முறை, குழந்தைகளின் பாலியல் மற்றும் பிற நுஷ்பிரயோகங்கள், குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் போன்ற குற்ற நடவடிக்கைகள் மட்டில் ஊழம், தாமதமாகக் கையாளுதல், அரசியல் தலையீடு, நீதியைச் செயற்படுத்தும் அதிகாரிகளின் தவறான தீர்ப்புக்கள என்பன சுகாதாரம், சமூகம், கல்வி, பொருளாதாரம், அரசியலில் நன்நெறிப் பிறழ்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இதைச் சீர்செய்வது மதத் தலைவர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரச நிறைவேற்று அறிவரிகளுக்கான ஓர் அழைப்பாகும்,

கொவிட் -19 பெரும் தொற்று ஏற்படுத்திய பொருளாதார பின்னடைவால் முழு நாடும் உதவியற்ற நிலையில் உள்ளது. அதிக விகிதமான வேலையின்மை தவிர்க்க முடியாத வறுமையை ஏற்படுத்தி நிற்கின்றது. எனவே சுயநலத் திட்டங்கள் தவிர்க்கப்பட்டு, முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டு, அதற்கு வேண்டிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். ஏனைய நாடுகளில் காணப்படும் சிறந்த நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்கும் அதேவேளையில் தலைமைத்துவமானது அரசியல் கருத்துக்களையோ, சுய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவோ அல்லாது, நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட வேண்டும். 

இறைவன் நம் நேசத்துக்குரிய தாய்நாட்டையும் அதன் அனைத்துக் குடிமக்களையும் ஆசீர்வதிப்பாராக என்றுள்ளது. 

Previous Post Next Post