விடுமுறை வழங்கவில்லை! சார்ஜன்ட் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸார் சாவு!! (படங்கள்)


அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்ஜென்ட் ஒருவரால் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மற்றும் மேலும் இரு அதிகாரிகள் காயமடைந்து திருக்கோவில் மற்றும் அக்ரைப்பற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மற்றொரு சார்ஜன் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையம் சிறப்பு அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் அத்திமலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரண்டைந்துள்ளார்.

இதேவேளை குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் சார்ஜன்ட் ஒருவர் வீடு செல்வதற்கு நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.

எனினும் அவருக்கு விடுமுறை வழங்கததால் கோபமடைந்த சார்ஜன்ட் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் காவல்நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத சக காவல்துறை அதிகாரிகள் அவரை தடுக்க முற்பட்ட போது அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்.
Previous Post Next Post