திடீரென புகையிரதப் பாதைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ரயில்! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

புகையிரதம் வருவதை அவதானிக்காமல் புகையிரத பாதைக்குள் நுழைந்த 
முதியவர் மீது புகையிரதம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் முறிகண்டி - அக்கராயன் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எக்காலத்தொணி திருச்சபை ஊழியரான பி.பத்மசீலன் (வயது-50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி பயணித்த குறித்த நபர், தரித்திருந்த ரிப்பர் வாகனத்தை கடந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புகையிரத திணைக்கள பொலிசார் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக அருகில் உள்ள வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர். இதேவேளை, குறித்த வீதி பெருமளவு மக்கள் நடமாடும் வீதி என்பதாலும், பாடசாலை மிக அருகில் உள்ளமையாலும் பாதுகாப்பான புகையிரத கடவை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் பல்வுறு தடவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்று பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற விபத்து இறுதியான விபத்தாக அமையும் வகையில் பாதுகாப்பு கடவை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post