பிரான்ஸில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனாத் தொற்று! பேராபத்தின் அறிகுறி!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 26 869 பேர் கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். பிரான்சில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இப்படி உச்சத்தை தொட்டுள்ளமை பேராபத்தின் அறிகுறியாகவே உள்ளது.

இதன் மூலம் பிரான்சில் கொரோனாத் தொற்றிற்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தினைத் தாண்டி உள்ளது.

இத்துடன் கடந்த 24 மணிநேரத்திற்குள் கொரோனாத் தொற்றினால் 54 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனத் தொற்றினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 32 684 ஆக உயர்ந்துள்ளது. இதில் வைத்தியசாலைகளில் மட்டும் 21 852 பேர் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 7976 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1456 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post