
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று இளங்குன்றனுக்கு நடந்தது போல் நாளை உங்களுடைய பிள்ளைகளுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க இதன் உண்மைத்தன்மையை கண்டறிய முயற்சி செய்யுங்கள், இன்னுமொரு கொலை வேண்டாம் இந்த மண்ணில் தமிழினம் தலை நிமிர்ந்து வாழ கல்வி ஒன்றே ஆயுதம்.
அதிகஸ்ட பிரதேசமான வடமராட்சி கிழக்கு நாகர்கோயிலில் ஒரு சாதாரண குடும்பத்தில் சிதம்பரநாதன் கமலவேணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனாக 1997 இல் பிறந்தவர்,
ஒவ்வொரு பெற்றோரும் எத்தனையோ கனவுகள், ஆசைகளுடன் தான் தமது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
அப்படியான ஒரு ஊக்கம் நிறைந்த குடும்பத்தில் கடைசி மகனாக மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட இவன் நாகர்கோயில் மண்ணின் முதலாவது வைத்தியர் என்ற பெருமையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 3ஆம் வருடம் கற்றுக் கொண்டு இருந்த போது தான் இந்த துன்பியல் சம்பவம் நடந்துள்ளது.
நேற்றைய தினம் துன்னாலை வடக்கில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இந்த துன்பியல் மரணச்சடங்கு அந்த ஊரையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,
இறைவன் படைத்த உயிரை எடுக்கின்ற உரிமையை உங்களுக்கு தந்நது யார்?
மிகவும் திறமைசாலியான இந்த மாணவனின் வளர்ச்சியை கண்டு பொறுக்காதவர்களல் தான் சதி செய்து கொலை செய்து தூக்கிலிடப்பட்டிருக்கிறான், அவனது கால்கள் முழந்தாளுடன் நிலத்தில் முட்டப்பட்டிருந்தது, இரண்டு யன்னலுக்கு இடையில் நைலோன் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.
மிகவும் அமைதியான சாந்தமான தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருந்தவனை கொடூரமாக கொலை செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது?
இந்தக் கொலையை செய்தவர் யாராக இருந்தாலும் நிச்சயம் உங்களுக்கான தண்டனை கிடைத்தே தீரும்.
'' அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று கொல்லும்''
என்று சொல்லுவார்கள், பத்து மாதம் சுமந்து அவனைப் பெற்ற அந்த தாயின் வயிறு பத்தி எரிகிறது, தந்தையைக் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை, ஐந்து சகோதரர்களும் கதறுகின்றார்கள்.
ஆலமரத்தின் சோலையிலே மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த அந்த குடும்பத்தின் குல விளக்கு அணைந்து போய்விட்டது, அவன் தற்கொலை செய்வதற்கு எந்த விதமான காரணும் இல்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர் உண்மை தான் அங்கு வந்த சகலரது பேச்சும் "படுபாவிகள் கொன்று விட்டார்கள் என்பதே"
'' ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்''
உண்மையில் அவன் ஒரு சான்றோன் தான், காலம் அவனைக் கொன்று விட்டது.
அவனும் தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்காய் இரவு பகல் கண் விழித்து படித்து தான் ஒரு வைத்தியத்துறைக்குள் நுழைந்து இருப்பான்.
இன்னும் இரண்டு வருடத்தில் ஒரு வைத்தியனாக வெளி வர வேண்டிய இளவல் மறைந்ததன் மர்மம் என்ன? விடை தெரியாத இந்தக்கேள்வி, இறைவனுக்கே வெளிச்சம்
கடந்த வருடமும் மன்னாரைச்சேர்ந்த வைத்தியபீட மாணவன் ஒருவன் இதே போல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
இனியொரு மருத்துவபீட மாணவனுக்கும் இளங்குன்றனுக்கு நடந்தது போல் நடக்கக்கூடாது என்பது தான் மரண வீட்டில் நின்ற அனைவரதும் பதில்,
வைத்தியத் தொழில் புனிதமானது, கடவுளிற்கு ஒப்பானது என்றெல்லாம் வீர வசனம் பேசி கை எடுத்து வணங்குகின்றோம், அப்படியான உன்னதமான தொழிலை எதிர்காலத்தில் செய்யப்போகும் நீங்கள் உங்கள் சக பாடியின் அபார திறமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனை அழித்தமை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.
போட்டி நிறைந்த இந்த உலகிலே சாதிக்க பிறந்த நீங்கள் அனைவருமே அறிவைத்திருட முடியாது அவரவர் கடுமையாக முயன்று படித்தால் முன்னுக்கு வரலாம் அதற்காக முதல் நிலையில் இருக்கின்றவனை கொன்று பெறும் வெற்றி அது வெற்றியே அல்ல அது துரோகம்.
1st Class எடுக்க வேண்டும் என்பதற்காகவோ/ என்ன காரணத்திற்காகவோ அநியாயமாக ஒரு அப்பாவி உயிரைக் கொன்று விட்டீர்களே,
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்...வாய்மையே வெல்லும்....
தாமதாமாக என்றாலும் தண்டனை கிடைத்தே தீரும் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை....
இனி நமக்கென்ன எமது மகன் டொக்டர் என்று பல்லாயிரம் கனவுகளுடன் வாழ்ந்த அந்தக்குடும்பம் எனும் கூடு இன்று சுக்குநூறாக சிதைந்து போய் விட்டது,
இறைவன் தான் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்...நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்ந நிலை கெட்ட மனிதரை எண்ணி.
தற்கொலைகள், கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன, இளம் சாவிற்கு மட்டும் பஞ்சமே இல்லை, அநீதி அழிய வேண்டும், நீதி தேவதையே கண் விழித்து பார்....
முகநூல் பதிவிலிருந்து....