விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
விபத்தில் சிக்கிக் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 6 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (18)உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி உதயபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் நிதிலா (வயது-06) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். கடந்த 08 ஆம் திகதி நடந்த விபத்தில் இவர் படுகாயமடைந்தார்.

பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்தபோது வீதியில் முன்பாகத் திரும்பிய டிப்பர் ஒன்றின் பின்புறத்தில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளனானது.

அதில் முச்சக்கரவண்டியின் கூண்டுக் கம்பி தலையில் தாக்கி சிறுமி படுகாயமடைந்து மயக்கமுற்றார். சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் நேற்றுச் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
Previous Post Next Post