கொரோனா வைரஸ் மிகவும் கொடியது! பாதிக்கப்பட்ட பிரான்ஸ் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
தென்னாபிரிக்க வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய பிரான்ஸின் தொழில் அமைச்சர் Elisabeth Borne (வயது 59) மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார்.

கடந்த மார்ச் 14 ஆம் திகதி தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சில தினங்களில் மிகவும் பலவீனமான நிலையை அடைந் ததால் ஒருவார காலம் மருத்துவமனையில் கண்காணிப்பின் கீழ் இருந்து வந்தார்.

அங்கிருந்து வெளியேறி தற்சமயம் தனது கடமைகளை ஆரம்பித்துள்ள அவர்
தனது நோய் அனுபவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்குச் செவ்வி வழங்கினார்.

"இது மிகுந்த அச்சமூட்டும் ஒரு கொடிய நோய் (terrible disease). தென்னாபிரிக்க வைரஸ் என்பது உறுதியாக தெரியும் வரை எதையும் கணிக்க முடியாது என்று மருத்துவப் பராமரிப்பாளர்கள் என்னிடம் கூறினர். ஒரே சமயத்தில் பல வித நோய்களால் பாதிக்கப்பட்டது போன்ற கூட்டு உணர்வு ஏற்பட்டது.."

"எனக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டது. மூச்சு விட முடியாமற் போனது. "நான் ஒரு தடகளவிளையாட்டு நபர், எனக்கு நாள்பட்ட நோய் என்று ஏதும் இல்லை, இந்த வைரஸால் நான் மிகவும் அதிர்ச்சிடைந்தேன் என்பதை உங்களு க்குச் சொல்ல முடியும். எனவே இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று" என்று அவர் தெளிவுபடுத்தினார்.

"இப்போது குணமடைந்து விட்டேன். ஆனாலும் முந்திய நிலைமைக்குத் திரும்புவதற்கு இன்னும் நாள் எடுக்கும்"-என்றும் அவர் தெரிவித்தார்.
 
பிரான்ஸில் அரசுப்பிரமுகர்களில் அதிபர் எமானுவல் மக்ரோன் கலாசார அமைச்சர் Roselyne Bachelot ஆகியோரும் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்கு இலக்காகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post