யாழ்.பருத்தித்துறையில் சற்றுமுன் வாள்வெட்டு! ஒருவர் உயிரிழப்பு!! ஆறு பேர் படுகாயம்!!! (வீடியோ)


இரண்டாம் இணைப்பு! 

வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத்தலைவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகராசா கௌசிகன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அல்வாய் வடக்கு முத்துமாரி அம்மன் கோவிலடியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இன்றைய தினம் மதியம் வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைளையும் முன்னெடுத்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post