யாழில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு!!


யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் யாழ்ப்பாணத்தில் 2 பேர் கோவிட் -19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூர் பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த 59 வயதுடைய R.சிவசண்முகநாதன் என்பவரே  இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நிமோனியாவினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின்தகனம் செய்யப்படவுள்ளது.
Previous Post Next Post