கனடாவில் நடந்த வீதி விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடா, ஒன்ராறியோ, நோர்த் பை அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஸ்காபொரோவைச் சேர்ந்த ஆனந்தராம் மதுரா (வயது-31) என்ற பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.
நெடுஞ்சாலை 11 இல் படகொன்றை இழுத்துச் சென்ற வாகனம் குறித்த பெண்ணின் வாகனத்துடன் மோதியதிலேயே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.