நல்லூர் ஞானப்பிரகாசம் சுவாமியின் 75 ம் ஆண்டு நினைவு தினம்! (படங்கள்)

நல்லூர் ஞானப்பிரகாசம் சுவாமியின் 75 ம் ஆண்டு நினைவு தினம் கடந்த வாரம் திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
 
யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த பரராசசோழனின் வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் மகனாக வைத்தியலிங்கம் 30.08.1875 ஆண்டு மானிப்பாயில் அவதரித்தார்.

வளர்ப்புத் தந்தை தம்பிமுத்துப்பிள்ளை 5 வயதில் திருவருட் சாதனத்தை பெற்று கத்தோலிக்க மதத்தில் "ஞானப்பிரகாசர்" எனும் திருநாமத்தை பெற்றுக் கொண்டார்.

வளர்ப்புத் தந்தை தம்பி முத்துப்பிள்ளையே இவரது தமிழ், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் முதல் குரு. 1895ம் ஆண்டு இறைப்பணிக்காக தம்மை அர்ப்பணித்து 01.12.1901 ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1903 ல் ஊர்காவற்துறையில் முதலாவது இரவல் நூல் வழங்கும் நூல் நிலையம் வட இலங்கையில் நிறுவியிருந்தார். சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல்,எழுத்துத்துறை முதலியவற்றைக் கொண்டு பல மொழிகளில் பல நூல்களை எழுதியமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post