காலி முகத்திடலில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்! ஜனாதிபதிக்கு எதிராக மலர் வளையத்துடன் போராட்டம்!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள், உணவுப் பொருள், எரிவாயு, மருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையிலேயே, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் மரண அறிவிப்புடன் கூடிய மலர்வளையத்தை ஏந்தியவாறு பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post