
சந்தேகநபர் அதேயிடத்தை சேர்ந்தவர் எனவும் கடந்த 9ம் திகதி சிறையிலிருந்து விடுதலையான அவர் மீது கொலை மற்றும் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த 9ம் திகதி இரவு குறித்த சந்தேகநபர் மேற்படி வயதான பெண்ணின் வீட்டின் முன்னால் ஹோர்ன் அடித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிலிருந்த பெண் வெளியே வந்ததை தொடர்ந்து வீட்டு வாசலில் வைத்தே வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதன்போது அலறல் சத்தம் கேட்டு 70 வயதான சகோதரி ஓடிவந்த நிலையில் அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த இரு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருக்கின்றனர். மேற்படி சம்பவம் இடம்பெற்று 9 நாட்கள் கடந்துள்ளபோதும் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.