இலங்கையில் பூமி அதிர்வு!

இலங்கையில் இன்றைய தினம் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

வெல்லவாய, புத்தல மற்றும் ஹந்தபானகல பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உயிர் அல்லது கட்டட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சிறு அளவிலான நில அதிர்வானது நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post