பிரான்ஸில் காணாமல் போன யாழ். இளைஞன்! கதறும் தாயார்!! (வீடியோ)

பிரான்ஸில் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என தாயார் கண்ணீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களான நிலையில் மகன் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த இளைஞன் பிரான்சில் 10 வருடங்களாகியும் காட் கிடைக்காமல் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கணவரை இழந்த குறித்த பெண்ணுக்கு மகன் ஒருவர் மட்டுமே அவர் வாழ்வின் ஆதாரமாக இருந்துள்ளார்.

குறித்த தாயார் இந்தியாவில் தனித்து வசித்து வரும் நிலையில் மகன் பிரான்ஸிற்கு சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
Previous Post Next Post