கனடாவில் வாகன விபத்து! முல்லைத்தீவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!

நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டம், அனிஞ்சியன்குளம் மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான குலசிங்கம் கிருபாகரன் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.

வீதியில் திடீரென பாய்ந்து ஓடிய மான் ஒன்றின் மீது வாகனம் மோதி நிலை குலைந்தே விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இவருடன் சென்ற மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

கோப்பாய் ரீச்சர் என மல்லாவியில் உள்ளவர்களால் அழைக்கப்படும் ஆசிரியையின் மகனான இவர் கனடாவிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகின்றது எனத் தெரியவருகின்றது.

அவருடைய உடலை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு சுமார் $15000 வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான உதவியை ஏற்படுத்தி தருமாறு கனடா வாழ் உறவுகள் கேட்டுள்ளார்கள்.
Previous Post Next Post