வெனிசுலா தலைநகரம் மீது குண்டு வீச்சு! நேரத் தாக்*குதலைத் தொடங்கியது அமெரிக்கா!! (வீடியோ)

வெனிசுலா நாட்டின் தலை நகரம் காரகாஸ் உட்படப் பல பகுதிகள் மீது வான் வழிக் குண்டுத் தாக்*குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. காரகாஸ் நகரை உலுக்கிய வெடியோசைகள் நகர மக்களைப் பெரும் பீதி*க்குள்ளாக்கியதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று வெனிசுலா வான்பரப்பில் அடையாளம் தெரியாத விமானங்கள் பறந்துள்ளன. அவை அமெரிக்கப் போர் விமானங்கள் என நம்பப்படுகிறது.

நாட்டின் வான் பரப்பில் சிவில் விமானப் போக்குவரத்துக்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பது தெரிந்ததே. இன்று சனிக்கிழமை காலை இந்தச் செய்தி வரையப்படும் வரை என்ன நடக்கிறது என்பதைப் பென்ரகன் உடனடியாக உறுதி செய்யவில்லை.

ஆனால் தென் அமெரிக்காவின் மெக்ஸிக்கோ மற்றும் கொலம்பியா ஆகிய அயல் நாடுகளில் இருந்து வெளியாகிய செய்திகளின் படி, தலைநகர் காரகாஸில் இராணுவ நிலைகள் பலவும் தாக்*குதலுக்கு இலக்காகி இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் கியூகோ சாவோஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மலைப்பகுதிப் படை முகாம்களும் தாக்*குதலுக்கு இலக்காகியுள்ளன என்ற தகவலை மெக்ஸிக்கோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"அவர்கள் வெனிசுலாவைத் தாக்*குகிறார்கள். முழு உலகிற்கும் இது எச்*சரிக்கை " என்று கொலம்பியா நாட்டின் அதிபர் குஸ்ராவோ பெட்ரோ (Gustavo Petro) தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகளின் படி வெனிசுலா அதிபர் நிக்கொலாஸ் மன்டூரா (Nicolas Mandura) நாடு முழுவதும் அவசரகால நிலையை அறிவித்திருக்கிறார்.
Previous Post Next Post