
வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சட*லம் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு குறித்த கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத் தக*ராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நீரில் மூழ்கி இருவரும் சா*வடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த கிருசாந்தன்(22), நிசாந்தினி(19) ஆகிய இளம் தம்பதியே சட*லமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.