
ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தவணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே அவர் மீது இன*ந்தெரி*யாத மூன்று பேர் கொண்ட கும்ப*ல் தாக்*குதல் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –
புங்குடுதீவில் இடம்பெற்ற சட்*டவிரோ*த மாடுகட*த்தல் சம்பவம் மற்றும் படு*கொ*லை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் அகிலன் கொ*லை தொடர்பில் கொ*லை*யாளிகளை அடையாளம் காட்டியமை சார்ந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இவ்வழக்கில் முன்னிலையாவதற்காக குணாளன் ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மூவர் கொண்ட கும்*பல் அவரை வழிமறித்து வா*ள்வெட்*டுத் தா*க்கு*தலை மேற்கொண்டுள்ளது.
இதன்போது அவரது கையில் பல*த்த கா*யம் ஏற்பட்டதுடன், மூன்று விரல்கள் துண்*டிக்க*ப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.