பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி! (வீடியோ)

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் கூடியதால் செய்வதறியாது திணறிய பொலிஸார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

இவ் விழாவில் நடிகர் விஜயின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் பலர் டிக்கெட்டுக்களை அடித்துப் பிடிங்கி வாங்கி விழாவுக்குள் சென்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரி வளாகத்தில் ரசிகர்கள் அதிகளவில் வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பொலிஸார் இறுதியில் தடியடிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post