லொறிக்குள் அடைத்து இங்கிலாந்துக்கு கடத்தல்! 39 பேர் முச்சடக்கிச் சாவு!!

இரகசியமான முறையில் இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்ட 39 பேர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த 39 பேரும் பொருட்களை ஏற்றும் கண்டெய்னர் லொறி ஒன்றில் அடைக்கப்பட்டு இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இறுக்கமான சிறு பகுதிக்குள் நீண்ட நேரம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் மூச்சுத் திணறி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் எசெக்ஸ் தொழில்துறை பூங்காவில் கண்டெய்னர் லொறி ஒன்றில் 39 பேர் உயிரிழந்து கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பலியானவர்களில் பதின்ம வயதினரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கெரியாவில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த கண்டெய்னர் லொறி, வெல்ஷ் துறைமுகமான ஹோலிஹெட் வழியாக கடந்த வாரம் இறுதியில் இங்கிலாந்துக்குள் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இறந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் இது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கண்டயெ;னர் லொறியைச் செலுத்தி வந்த 25 வயதான ஜரிஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பிரதி படேல் தனது வருத்தத்தைத் தெரிவித்து ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post