பிரான்ஸ் பொலிஸ் நிலையத்திற்குள் கத்திக் குத்து! 4 பொலிஸார் உயிரிழப்பு!! (வீடியோ)

பிரான்ஸ் பரிஸ் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பெண் அதிகாரியும் அடங்குகின்றார்.

இத் தாக்குதலை மேற்கொண்ட நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இல்-து-லா-சித்தே பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தின் உள்ளே இடம்பெற்றுள்ளதுடன், இத் தாக்குதலை மேற்கொண்ட நபர் அங்கு பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த 20 வருடங்களாக அங்கு பணியாற்றி வருகின்றார் என்பதுடன் அவர் இத் தாக்குதலை மேற்கொண்டமை சக பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தும் இத் தாக்குதல் சம்பவத்துக்கான காரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத் தாக்குதலை அடுத்து பிரான்ஸ் அரச தலைவர் இமானுவேல் மக்ரன், பிரதமர் எடுவாட் பிலிப் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.
Previous Post Next Post